Saturday, September 8, 2012

கடந்த கால நினைவுகள்.  தலித் வாழ்வியல். தலித் இளைஞர்களின் மென்மையான இளமை கால ஆனந்த அனுபவங்கள். தலித் தாயின் பரிவு, போதையில் பாசத்தை பொங்கும்  தந்தை,  பூட்போர்டு, கானா, ஒப்பாரி, மாட்டுகறி, "சாவு" கூத்து, சாவு மோளம்,  மச்சான் என அன்பை கொட்டும் நட்பான உறவுகள், ஆங்கிலத்தில் முப்பது அஞ்சி மார்க் எடுக்க படும் கஷ்டம், ரூட்டுதல, காண்டு, கிக்கான சேரி பாஷை, ஜாதி இந்து பெண்களால் சிரித்து பேச உபயோகமாகி போகும் அட்டகத்திகள், காதலெனும் மாயைக்கு கற்ப்பு  கற்பித்த தமிழ் கயமைக்கு சவுக்கடி.தலித் மொழிக்கு மெருகூட்டும் வசனங்கள், தலித் மக்களை ரவுடிகளாகவே சித்தரிக்கும் தமிழ் திரை உலகுக்கு கொடுக்கும் எதிர்ப்பு குரல். தோல்விகளையும் துன்பங்களையும் தட்டிவிட்டுவிட்டு உடனே சிரிக்கும் தலித் துணிவு. அண்ணலை கிலைமாக்சில் காட்டி தனது நன்றியை செலுத்தும் பண்பு.பெரும்பான்மையான தலித் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட படம்.... தலித் திரைக்கலைக்கான முதல்படி. பிற்காலத்தில் தலித் திரை உலக வரலாற்றில் இப்படம் பேசப்படும். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். அட்டைக்கத்தி டீமுக்கு நமது ஜெய் பீம். 

No comments: