பாரதி சுப்ரமணியன் கிட்ட சொல்லுங்க வெறும் மீசையை முறுக்கிட்டு இருந்தா போதாது கொஞ்சம் புத்தியையும் முறுக்கணும். இட ஒதுக்கீட்டு உரிமை என்பது நாங்கள் கேட்டு வாங்கிய பிச்சை அல்ல அது நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதால் அடைந்த உரிமை. ஆங்கிலயேர் இந்த மண்ணை ஆள நாங்கள் அவர்களுக்காக உதவியதற்கு அவர்கள் எங்களுக்கு செய்த கைமாறு. வட்ட மேஜை மநாடுகளில் எங்க மீசைக்கார தாத்தாவும் கோட்டும் சூட்டும் போட்ட அண்ணலும் ஆழ சிந்திச்சு அறிவு பூர்வமா பேசி தங்கள் மக்களை ஒன்று கூட்டி ஆங்கிலேயனை உணர வைத்து அடைந்த உரிமைகள். கால் முடமா கை முடமா நடக்க முடியாம பேச முடியாம உள்ள நிலைய பார்த்து தேவமார்கள் பிள்ளை மார்கள் பார்ப்பன மார்கள் போட்ட பழைய கஞ்சியோ பழைய சோரோ பழைய சட்டையோ இல்லை அது எங்களது பங்கு. நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதற்க்கான உரிமை. அது இன்னும் முழுமையாக அடையும் வரை நாங்கள் போராடுவோம். எங்களுக்கு சேரவேண்டிய நிலங்கள், இயற்க்கை வளங்கள், சொத்துக்கள் எல்லாம் பார்ப்பன சூத்திர ஜாதி தமிழ் பன்னைகளிடம் முடங்கி கிடக்கின்றன அவற்றை அடையும் வரை போராடுவோம். அடுத்தவனுக்கு சேர வேண்டிய சொத்துக்களை முடக்கி வைத்துக்கொண்டு பரம்பரை சொத்து என உக்காந்து தின்னும் கூட்டம் அதை உணர்ந்து உரிமையாளர்களுக்கு பங்கிடும் வரை எங்கள போராட்டம் தொடரும்.
No comments:
Post a Comment