சினமயி சினமயின்னு ஒரு சின்ன பொண்ணு சொல்லுச்சி மீனவர்கள் செத்தா மட்டும் வருத்தப்டுகிறீர்களே மீன்கள் செத்தா வருத்தப்பட மட்டீர்களா? அப்படீன்னு கேட்டதுக்கு இந்த சூத்திர புலிகள் எல்லாம் குய்யோ முய்யோன்னு கத்தி கூப்பாடு போட்டதோடு அந்த பொண்ணு பேசுன இட ஒதுக்கீட்டு பிரச்சனைய முடிச்சு போட்டு சாக்கிய மக்கள் மீது காட்டிய கழிவிரக்கம் இருக்கே ஐயோ சாமி தாங்கலடா. ஆனா அந்த சூத்திர புலிகளும் திராவிட சிகாமணிகளும் இப்ப எங்க போயிட்டாங்கன்னு தெரியில. "ஐயா" மருத்துவர் ராமதாஸ் "ஐயா" அவர்களை ஏம்பா உங்க ஆளுங்க தருமபுரியில் தலித் வீடுகளை கொளுத்துனாங்கன்னு கேட்டதுக்கு "தலித் மக்கள் வாழும் பகுதிகள் வழியாகச் செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை" "காதல் திருமணம் என்ற பெயரில் பின் தங்கிய, மிகவும் பின் தங்கிய, முன்னேறிய வகுப்புகளை சேர்ந்த பெண்களை பாதிப்புக் குள்ளாக்கி வருகிறார்கள்." என்று ராமதாஸ் அறிக்கை வெளியிடுகிறார். இது வன்மம் நிரந்த ஜாதி வெறி ஜாதி ஆணவம் நிறைந்த வார்த்தை. தனது மக்களின் ஜாதி வெறி வன்கொடுமைகளை மறைக்க அவர் திட்டமிட்டு தலித் மக்களின் மீது அவதூறு பரப்பி வருகிறார். இது சட்டப்படி கிரிமினல் குற்றம். வன்கொடுமையால் பதிக்கப்பட்ட மக்கள் வேதனையில் வெந்து எரியும்போது அவர்களை மேலும் மன ரீதியாக இவருடைய வார்த்தைகள் அவர்களை துன்புருத்துகின்றன. இது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இது தலித் மக்களுக்கு எதிரான வார்த்தைகள். அரசு வன்கொடுமை தடை சட்டத்தின் "intentionally insults or intimidates with intent to humiliate a member of a Scheduled Caste or a Scheduled Tribe in any place within public view" Section 3 X SC & ST (Prevention of Atrocities) Act, 1989கீழ் ராமதாசை கைது வேண்டும்.
No comments:
Post a Comment