ஈழம் என்றால் கற்பூரம் போல பத்திக்கொள்ளும் சிறுத்தைகள் சேரி என்றால் கரிக்கட்டை போல இருப்பதற்கு யார் கரணம்? என்பதுக்கு பிறகு பிறந்த தலித் குழந்தைகளின் கையில் அண்ணலை கொடுப்பதற்கு பதில் பிரபாகரனை கொடுத்தது யார்? சாக்கியத்தை கொடுப்பதற்கு பதில் தமிழ் தேசிய உணர்வை கொடுத்தது யார்? ஈழத்துல தமிழன் செத்தா துடிக்கும் இந்த சதை தன் சேரியில் சாகும்போது துடிக்க மறுப்பதற்கு காரணம் யார்? சிங்களவன் ஆன்னியன் என்றும் உண்மையான அந்நியன் இந்த வன்னியன் நமது தமிழ் சொந்தம் என்றும் அவனுக்கு சொல்லி கொடுத்தது யார்? வன்னியர் மீது வெறுப்பை உமிழ சொல்லவில்லை. அவனது ஆதிக்கத்தை ஜாதி வெறியை கொடுகோல் அதிகாரத்தை எதிர்க்கு போர்க்குணம் இல்லாமல் நமது மக்களை மழுங்கடித்தது யார்? 80 களில் 90 களில் கொழுந்து விட்டு எறிந்த தீயை போர் குணத்தை தலித் அரசியலை சமூக நல்லிணக்கம் தமிழர் ஒற்றுமை எனும் பெயரில் நசுக்கியது யார்? இங்கு நாம் போர்குணம் என்பது "அடித்தா திருப்பி அடி" "கடித்தா திருப்பி கடி" எனும் விலகினங்களின் குணத்தை சொல்லவில்லை. அண்ணல் வழியில் 80 களில் 90 களில் நமது இயக்க தலைவர்கள் நடத்திய போராட்டங்களை நேரில் பார்த்தவரலுக்குர்களுக்கு தெரியும் அன்றைய அரசும் ஜாதி இந்துக்களும் நமக்கு நடுங்கிய நடுக்கங்கள். ஒரு தலைவன் ஒரு கட்சி என்று மக்களை ஏமாற்றுவதை தவிர்ப்போம். நமது இயக்கம் மக்கள் இயக்கம். மகாராஷ்ட்ராவில் ஒரு கட்சி ஒரு தலைவர் என்று இல்லை ஆனால் அங்கு இருக்கும் சமூக உணர்வை பாருங்கள். கைர்லாஞ்சியை உலகமே பேசியசியது அதற்கு கரணம் மகாராஷ்ட்ராவில் உள்ள மகார்கள் அதை மக்கள் இயக்கமாக அதை மாற்றினார்கள். உலகத்துல எங்க போனாலும் மஹார் மஹார்களாக உள்ளனர். தங்களோடு அண்ணலையும் சாக்கிய இயக்கத்தையும் கொண்டு செல்கின்றனர். நாம் நமது அடையாளத்தை மறைத்துக்கொண்டு நான் தமிழன் நான் திராவிடன் என்று ஆண்டு முழுவதும் பேசிக்கொண்டு இருக்கிறோம். அப்புறம் எப்படி திடீர் என்று சாக்கிய உணர்வுடன் தர்மபுரிக்கு துடிப்பது.
நமது பிரச்சனையை அரசியல் ஆக்காமல் நாம் வெல்ல முடியாது. தமிழ் தேசிய அரசியலில் இனியும் மக்கி மண்ணா போகாமல் மீண்டும் 80 களில் 90 களில் கொழுந்து விட்டு எறிந்த அம்பேத்கரிய சாக்கிய அரசியலை கையில் எடுப்போம்.
No comments:
Post a Comment