காலைல எழுந்து டீக்கடைக்கு போனா தினதந்தி தினகரன்ல கொடுக்கப்பட்ட போதை மருந்துதான் தமிழ் இன உணர்வு. அந்த போதையில் இருப்பவர்களுக்கு பக்கத்துக்கு தெருவில் இருக்கும் வன்னியன் அடிப்பது, வசை படுவதும் உரைக்காது. ஒரு சிங்களவனை கூட நேரில் பார்த்தது கிடையாது ஆனால் அவன் மீது அப்படி பட்ட கொலைவெறி. ஈழம் எப்படி இருக்கும் அங்கு தினம் தினம் மக்கள் செத்துக்கொண்டு இருக்கிறார்களா என்று எதுவும் தெரியாது ஆனால் ஈழத்தை பற்றி பேசினால் மனம் பதை பதைக்கிறது. ஆனால் தான் வாழும் சேரியின் நிலை ஈழத்தின் நிலையை விட படு பயங்கரம் என்றாலும் அதை உணரும் சக்தி அற்று மரக்கட்டைகளாக மாறியுள்ளனர் நம் மக்கள். எந்த ஒரு இயக்கமும் அமைப்பும் அதன் வலிமையை இழக்கும் அது தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படவில்லை எனில். தமிழ் தேசியம் எனும் அட்டை கத்தி அரசியல் நுழைவுக்கு காரணம் சேரியில் இருந்த அம்பேத்கரிய வாதிகள் தங்களது பணியை செய்யாமல் போனதே. அதற்கு அவர்கள் சொல்லும் கரணம் "அவர்" நம்மவர். அவர் நம்மவர்தான் ஆனால் அவர் பேசிகொண்டு இருக்கும் "தமிழ் தேசியம்" ஆண்டைகளின் தேசியம் அதை அழிக்காமல் ஆண்டைகளின் தேசியத்தை அழிக்க முடியாது. ஆண்டைகளின் தேசியம் அழிய வேண்டும் எனில் நம்ம "அவர்" பேசும் "தமிழ் தேசியம்" அழியணும்.
No comments:
Post a Comment