"தலித் மக்கள் வாழும் பகுதிகள் வழியாகச் செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை" "காதல் திருமணம் என்ற பெயரில் பின் தங்கிய, மிகவும் பின் தங்கிய, முன்னேறிய வகுப்புகளை சேர்ந்த பெண்களை பாதிப்புக் குள்ளாக்கி வருகிறார்கள்." என்று மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இது Scheduled Caste மக்களுக்கு எதிரான வன்மமும் ஜாதி வெறியும் ஜாதி ஆணவமும் நிறைந்த வார்த்தைகள். அண்மையில் தருமபுரி மாவட்டதில் தனது ஜாதி இந்து வன்னிய சமூக மக்கள் Scheduled Caste மக்களுக்கு எதிராக நடத்திய ஜாதி வெறி வன்கொடுமைகளை மறைக்க அவர் திட்டமிட்டு Scheduled Caste மக்களின் மீது இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். இது சட்டப்படி கிரிமினல் குற்றம். வன்கொடுமையால் பதிக்கப்பட்ட மக்கள் வேதனையில் வெந்து எரியும்போது அவர்களை மேலும் மன ரீதியாக இவருடைய வார்த்தைகள் துன்புருத்தி வருகின்றது. இவருடைய வார்த்தைகள் Scheduled Caste மக்களுக்கு எதிரான வார்த்தைகள். இது Scheduled Caste மக்களுக்கு எதிராக ஜாதிய வன்மத்தை தூண்டும் வார்த்தைகளாக உள்ளன. இது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. தமிழக அரசு காவல் துறை மருத்துவர் ராமதாஸ் அவர்களை வன்கொடுமை சட்டதின் கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். Note: Section 3 (1) (X) SC & ST (Prevention of Atrocities) Act, 1989 says that whoever, not being a member of a Scheduled Caste or a Scheduled Tribe, - "intentionally insults or intimidates with intent to humiliate a member of a Scheduled Caste or a Scheduled Tribe in any place within public view".
No comments:
Post a Comment