தலித் மாணவர் அமைப்பில் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்த ஒருத்தர் ஒரு ஜாதி இந்து பையன லவ்பண்ணிட்டார். என்னோட சீநியர்க்கு எல்லாம் ஒரே கோபம். அந்த பொன்னை கூப்பிட்டு பேசினாங்க. நம்ம தலித் பசங்க இங்க நூத்துக்கு மேலே இருக்கோம். அதுவும் அம்பேத்கரியம் தலித்தியம் பேசிட்டு மாணவர் இயக்கத்தில் இருக்கும் நாங்க ஒரு அம்பது பேராவது இருப்போம். எங்களில் எவனையாவது லவ் பண்ண வேண்டியதுதானேன்னு கேட்டார்கள். ஆனாலும் அன்று நமது பசங்க அப்படி கேட்டபோது காதல் என்பது தனிப்பட்ட விஷயம்; அது ஆணாதிக்கம்; நமது பெண்கள் செய்யும்போது மட்டு இப்படி கேட்கிறீர்களே நமது பசங்க செய்யும்போது எப்போதாவது இப்படி கேட்டு இருக்கிறீர்களா என்றெல்லாம் வாதம் நடந்தது. அந்த பெண் ஒரு சாதாரன பெண்ணாக இருந்து இருந்தால் இந்த கேள்வியே எழுந்து இருக்காது. ஏனெனில் கேம்பசில் காதல் காமம் பிரிதல் என்பது மிகவும் சகஜமான ஒன்று. அந்த பெண்ணை அன்று அப்படி கேட்டதற்கு கரணம் அந்த பெண் சமூக அக்கறை உள்ள பெண் மேலும் தலித் மாணவர் அமைப்பில் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்தார். இப்படி அந்த பெண்ணிடம் கேட்டது கேம்பஸில் பரவி so called நாடுநிலை வாதிகள், பெண் அமைப்பை சேர்ந்தவர்கள் எல்லாம் அன்றைய தலித் மாணவர் அமைப்பில் இருந்த மாணவர்களை ஆணாதிக்கம் பிடித்தவர்கள் என்று விமர்சனம் செய்தார்கள். அதுக்கு அப்புறம் அந்த பெண் ரொம்ப சீரியஸா லவ்வில் இறங்கி எங்க பக்கமே வருவது இல்லை. அதுவரை பிரதர் சிஸ்டர்ன்னு பேசிட்டு இருந்தவர் தனது தொடர்புகளை துண்டித்து கொண்டார். முன்னாடி சீரும் சிறுத்தை போல இருப்பார். அதுக்கு அப்புறம் தலித் அல்லாதவர் போல மாறி விட்டார். ஒரு வேலை அவர் தலித் அல்லாத so called பொது அமைப்பில் இருந்து இருந்தால் இப்படி ஒரு தரும சங்கடம் இல்லை. சாக்கிய சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் தங்களது தனி மனித வாழ்வில் கூட காண்ஸியஸாக இருக்க வேண்டியுள்ளது.
அப்புறம் என்ன கேம்பசில் எப்போதும் நடந்த கதை தான் யூஸ் அண்ட் த்ரோதான். அவுங்க ஆண்டாண்டு காலமா செய்ததை நம்ம பசங்க இப்போ செய்துடுவாங்கலோன்னு தான் ராமதாசும் வன்னிய சிகாமணிகளும் பயப்படுறாங்க. ராமதாசின் இந்த பயம் அவரது அறிக்கையில் தலித் இளைஞர்கள் பழி வாங்குகிறார்கள் என்று சொல்வதிலே தெரிகிறது. அவர்கள் ஆண்டாண்டு காலம் செய்யும் தவறை நம்ம பசங்களும் செய்வார்களோன்னு பயப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment