Monday, November 19, 2012

ஜாதி இந்துக்களின் ஆழ் மனதில் நம்மை பற்றிய வெறுப்பு அதிகம் உள்ளது. நம் பெண்களை விரும்புவதை விட காதலில் காமம் கொள்வதை விட வெறுப்பில் அவர்களை தங்கள் காம இச்சைக்கு பயன்படுத்தியதே வரலாறு. ஆண்டாண்டு காலமாக அவர்களின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களே நமது பெண்கள். நமது ஆண்களை அவர்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட வரலாறும் உண்டு. இன்னைக்கு நமது பொருளாதார முன்னேற்றத்தாலும், உலகமயமாதல் எனும் பொருளாதார எழுச்சியாலும் பெரும்பான்மையான நமது ஆண்களும் பெண்களும் வன்னியர்களின் வயலுக்கு பெரும்பாலும் வேலைக்கு போவதில்லை. படித்து நகரங்களில் குடியேற ஆரம்பித்து விட்டனர், பக்கத்துக்கு நகரங்களுக்கு வேறு வேலை பார்க்க போய் விடுகின்றனர். தருமபுரியில் நமது பொருளாதார  எழுச்சியை பார்த்து வயிறு எரிய காரணம் அதுதான். முன்னால் நமது கழனியில் அடிமை வேலை பார்த்துக்கொண்டு நமது இச்சைகளை  எல்லாம் பூர்த்தி செய்து கொண்டு இருந்த கூட்டம் இன்னைக்கு நம்மை மதிப்பது இல்லையே என்ற காண்டு. வயலுக்கு நமது பெண்கள் போகாதது அவர்களுக்கு இன்னும் அதிக விரக்தி, அங்குதானே இத்தனை காலமும் அவர்களின் ஆணாதிக்க ஜாதி வெறி ஆளுமையை காட்டிக்கொன்டு  இருந்தனர்.


///ஏன் எந்த தலித் பொண்ணும் ஒரு so called other caste பைய்யன கல்யாணம் பண்ணிகிச்சு ! கலவரம் வந்துச்சு ! அப்படின்னு நியூஸ் வர மாட்டேங்குது !//// நம்ம மக்கள் இப்பதான் ஆணாதிக்கம்னா என்னன்னு கத்துகிட்டு இருக்காங்க. ஆணாதிக்கமும் ஜாதி வெறியும் நமக்கு வந்துடுச்சினா நாமலும் நம்ம பெண்களை அவர்கள் கல்யாணம் பண்ணிக்கொள்ளும்போது கலவரம் செய்வோம். 






No comments: