Tuesday, November 13, 2012

ஆரியன் வந்தானாம் நரகாசூரனை கொன்நானாம். வெண்ணைகளா இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி புராணம் படித்துக்கொண்டு இருப்பீர்கள். எந்த  ஆரியனும் வரல நரகா சூரனும் சாகல. வன்னியன் வந்தான் நம்ம வீட்ட கொளுத்துனான். நிகழ்காலதுக்கு வாங்க சாமி. இப்புடியே ஆரிய திராவிட ராம ராவண காவியம் படிச்சிட்டு இருந்தீங்கன்னா இருக்குற குடிசையும் இல்லாம போயிடும்......



////தமிழர்களாக இனம் சார்ந்து ஒன்று சேர்ந்து நிற்பதே சாதீய முரண்களை,வன்மங்களை களைவதற்கான வழி. ////   இவனுங்க திருந்தவே மாட்டானுங்களா? இன்னும் வரும்டா? இது போல இன்னும் நடக்கும், இப்புடியே பேசிட்டு இருந்தீங்கன்னா.... 

நான் ஆட்களுக்கு லைக் கொடுக்கல. அவர்கள் சொல்லும் கருத்துக்குதான் கொடுக்கிறேன்.... 

ஒரு இடத்தில் வேறுபடுபவர்கள் மற்றொரு இடத்தில் ஒரே கருத்துடையவர்களாக இருப்பார்கள். நான் ஆரியத்தை விமர்சிக்கும்போது திராவிடம் சந்தோஷப்படும். திராவிடத்தை விமர்சிக்கும்போது ஆரியம் சந்தோஷப்படும் நான் ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை. நான் சாக்கியம்....

நான் ஆரியத்தை விமர்சித்தாலும் லைக் கொடுப்பேன், திராவிடத்தை விமர்சித்தாலும் லைக் கொடுப்பேன்....

ஆரியம் திராவிடம் இரண்டுமே அதிகார கூட்டதின் அரசியலே...



தருமபுரியில் இந்த நிகழ்வு நடக்கவில்லை எனில் பண்டிதர் அயோத்திதாசர் வழியில் நானும் சாக்கியர்களின்  தீப ஒளி  திருநாளை கொண்டாடி இருப்பேன். அதற்க்கு என் மக்களுக்கு வாழ்த்தும் தெரிவித்து இருப்பேன்.... 

அப்படின்னா ஈழத்தில் பேசவேண்டியது தமிழ் தேசியம் அல்ல தலித்தியம் சகோதரர்களே....



மாத்தி யோசிப்போம். தலித்திய விடுதலையே "தமிழ்தேசிய" விடுதலை. தலித் விடுதலை பற்றி பேசுவோம், செயல் படுவோம் ....


தீப ஒளி  என்பது அறிவின் சின்னம். புத்தன் முதன் முதலில் உலகுக்கு அறிவு ஒளியை பரப்பியதை தீப ஒளியேற்றி பூர்வக்குடிகலான சாக்கியர்கள் ஆதியில் கொண்டாடினார்கள். எங்களுக்கு பண்டிகைகள் தேவை. ஆரிய திராவிட புலுகுகலை விளக்கி சாக்கிய பண்டிகையாக அதை கொண்டாடுவோம்..... 


No comments: