நாம ஜாதி ஒழிப்பு பொது அரசியல் பேசுவதா தலித் விடுதலை பற்றி பேசுவதா? நீங்க யோசித்து ஆலோசனை பண்ணி முடிவு பண்ணுறதுக்குள்ள இன்னும் ஒரு தர்மபுரி, பரமக்குடி, கைரலஞ்சி வந்துடும்.......ஜாதி ஒழிப்பு, வெங்காயம், வெள்ளை பூண்டு செய்யும் பொது சேவகர்கள் நமக்கு தேவை இல்லை. தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு கம்யுனிசம் ஹிந்து திராவிட தமிழ் தேசிய மாயையில் உள்ளவர்கள் அதை செய்து கொண்டு இருக்கட்டும். யாரெல்லாம் சமூக அக்கறையுடன் சொந்த அடையளத்துடன் வாழ விரும்புகிறார்களோ போராட விரும்புகிறார்களோ அவர்கள் நம்மோடு வரட்டும்.
என்பதுக்கு பிறகு குழந்தைகள்தான் திருமா புகழ் பாடிக்கொண்டு இருக்கின்றன அவர்களுக்கு எண்பதுகளில் நடந்த தலித் இயக்க வரலாறு தெரியாது. நம் முன்னோர்களை மதிக்கவும் தெரியாது. ரமசாமியிடமும் பிரபாகரனிடமும் பயிற்சி எடுத்தவர்களுக்கு நமது பாரம்பரிய போராட்ட வரலாறு தெரியாது...
தமிழ் தேசியத்தை ஒழிப்பதற்காக நாம் தலித் அரசியல் செய்கிறோமாம். ஆமாண்டா வெண்ணை. உனக்கு தமிழ் தேசியம் முக்கியம் எங்களுக்கு எங்கள் மக்கள் முக்கியம். நீங்க்கள் மொழி இன வெறியில் தமிழ் தேசிய அரசியல் பண்றீக. நாங்கள் வாழ எங்கள் உரிமைகளை நிலை நாட்ட தலித் அரசியல் செய்து கொண்டு இருக்கிறோம். உங்களுக்கு தமிழ் வாழனும் தமிழ் இனம் வாழனும் ஆனா நாங்க செத்தா பரவாயில்லை. எங்களுக்கு தமிழ் வழுதா தமிழ் இனம் வாழுதான்னு கவலை இல்லை. எங்கள் மக்கள் வாழனும். இதுக்கு நீங்க எங்களுக்கு கொடுக்கும் பட்டம் ஜாதி வெறியர்கள் என்பது ஒன்னும் புது பட்டம் இல்லையே காந்தி ராமசாமி சொன்னதுதான் இப்போது கருணாநிதி வைகோ சீமான், எங்க அண்ணன் கூட ஒருத்தர் சொல்லிட்டு தமிழ் தேசியம் பேசிட்டு திரிகிறார்.
No comments:
Post a Comment