அமேரிக்கா கன்னடா ஐரோப்பா நடுகளுக்கு போய் அங்கு செட்டில் ஆவது ஒன்னும் அவ்வளவு ஈஸி இல்லை. இலங்கையில் நடந்த சண்டைய காட்டி ஒரு பெரிய கூட்டம் அங்கெல்லாம் போய் செட்டில் ஆகி இருக்கு. கேட்டா நாங்க குடும்பத்த பிரின்ஞ்சி மண்ணை பிரிஞ்சி அங்க போய் வேதனை படுரோம்ன்னு கண்ணீர் வடிக்கிறார்கள். அங்க அவுங்க எப்புடி வேதனை பட்டுட்டு இருக்காங்கன்னு வெளி நாடுகளில் உள்ள நமது (சாக்கிய) மக்களை கேட்டா சொல்லுவாங்க... அங்கேயெல்லாம் போய் செட்டில் ஆனவர்கள் யாருன்னு ஒரு கணக்கு எடுங்க? அப்ப தெரியும் இங்க சண்டைய கிளறி விட்டுட்டு ஒரு கூட்டம் அதை சாதகமா ஆக்கி எப்படி குடும்ப சகிதமா போய் டேரா போட்டுன்னு இருக்காங்கன்னு. இந்தியாவுக்கு கள்ளதோணியில வரணும்னா கூட ஆயிரம் ஆயிரமா செலவு பண்ணனும். அப்படி பண்ண முடியாத மக்கள் தான் சண்டையில் செத்து அழிந்தவர்கள். அவர்களுக்கும் பணபலமும் ஜாதிய பலமும் இருந்து இருந்தால் தங்களை காப்பாற்றிகொண்டு இருந்து இருப்பார்கள். இன்னைக்கும் அவர்கள் அங்கு வாழ்வாதாரம் அற்று அழிந்து கொண்டு உள்ளனர். அவர்கள் வேறு யாரும் இல்லை நமது தலித் இன மக்களே. அவர்களை பற்றி பேச அவர்களுக்கான அரசியலை நடத்த அங்கும் யாரும் இல்லை. இங்கு இருக்கும் நமது தமிழ் அரசியல் வியாதிகளுக்கு அது பற்றி சிந்திக்க நேரமும் இல்லை.......அங்கு பிழைக்க தெறிந்த நமது (சாக்கிய) மக்கள் சிங்கள மக்களோடு சிங்கள மக்களாக மிக்ஸ் ஆயி போயிட்டாங்க......
No comments:
Post a Comment