பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்த்து போரடவில்லையாம் அதனால தான் வன்முறை நிகழ்கிறதாம். ஆமான்டா, நாங்க எங்களை காப்பாத்திக்க எப்பவும் கத்திய துப்பாக்கிய வச்சுக்கிட்டு ஆலயனும்னா எதுக்கு சட்டம், ஆட்சி, போலிசு, அமைச்சர், முதலைச்ச்சர் எல்லாம். நாங்களே எங்களுக்கான ஆட்சிய அமைச்சுக்க வேண்டியதுதான். மக்களின் உயிரையும் உடமைகளையும் பாதுக்கக்கதான் போலிசும் நீதி துறையும். மக்களின் பிரதிநிதி என்பவர்கள் திமிறி எழு திருப்பி அடின்னு எங்களுக்கு போதிப்பதற்கு அல்ல மக்கள் பிரதிநிதிகள். பதிக்கப்பட்ட மக்கள் தங்களை பற்றி தாழ்வாக நினைக்க வேண்டியது இல்லை. தாழ்வாக நினைக்க வேண்டியவர்கள் குற்றம் செய்த கிரிமினல்கள், குற்றவாளிகளிடம் இருந்து நம்மை காக்க முடியாத அரசு அந்த அரசின் தலைமை பொறுப்பில் உள்ள அமைச்சர்கள். நமது பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு திரியும் தலைவர்கள், எம் எல் ஏ க்கள் எம் பி க்கள். நாங்களே திமிறி எழுந்து திருப்பி அடிக்கனும்னா நீங்க எல்லாம் எதுக்கு இருக்கீங்க. இந்த நாட்டின் பிரதமர், முதல்வர், ஜனாதிபதி, தமிழ் இன தலைவர், தமிழ் குடிதாங்கி, எழுச்சி தமிழர் இப்புடி உங்களுக்கு எதுக்கு பட்டங்கள். ஒரு அரசாங்க பஸ்சு அக்சிடெண்டு ஆனா கூட பொறுப்பேற்று மாதிரி பதவிய ராஜினாமா செய்யும் அமைச்சர்கள் எல்லாம் இருக்காங்க. ஆனா இவ்வளவு பெரிய வன்கொடுமை, இரண்டாயிரம் பேர் மிருக வெறியில் வீடுகளை தாக்கியுள்ளனர். அதுவரை இந்த போலிசு என்ன செய்து கொண்டு இருந்தது கலக்டரு என்ன செய்து கொண்டு இருந்தார்? அரசு அதிகாரிகள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள். இது தான் இந்த நாட்டின் சட்ட ஒழுங்கா? ஆனாலும் எதுவுமே நடக்காததுபோல நடமாடிக்கொண்டு இருக்கின்றனர். மிருகங்களின் மீது இந்த ஜாதி வெறியர்களை விட நமக்கு அதிக மாண்பு இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன், நாளைக்கு ஒரு நூறு மாட்டை கொண்டு வந்து நாடு ரோட்டில் வைத்து எறியுங்கள் அது மறுநாளே உலகம் முழுக்க பேசப்படும் ஆனால், நாம் வீடுகள் மட்டுமல்ல நாமே எறிந்தாலும் இப்படிதான் இந்த சமூகம் மவுனமாக இருக்கும்.
No comments:
Post a Comment