இவை எல்லாம் நமது சொந்தங்களின் குரல்கள். இதுக்கு மேலேயும் அண்ணன் "அன்பார்ந்த தமிழ் சொந்தங்களே!" ன்னு சொந்தம் கொண்டாடிட்டு இருந்தா ................................
Joshua Isaac : நாங்கெல்லாம் தமிழர்கள்ன்னு சொல்லிகினு யாரும் தருமபுரி சேரிப் பக்கம் போயிடாதீங்கப்பா...எரிஞ்சு போய் மீந்திருக்கும் செருப்பாலயே அடிச்சிடுவாங்க..நம்ம புரட்சியெல்லாம் கனடா , அமெரிக்கா ஐரோப்பா நாடுகள்ல நடத்திக்கலாம்..
கு. உமாதேவி : வெட்கமில்லாமல் மானங்கெட்டு சொல்கிறீர்கள் நாம் எல்லாம் “பச்சைத் தமிழரென்று? பேசாம நாண்டுகிட்டு சாகலாம் நீங்க.
முத்தழகு கணேசன் : அடப்பாவிகளா முதுகுவலியும் திருகுவலியும் அவனவனுக்கு வந்தாதான்யா தெரியும்.......அண்ணே(திருமா) போதும்ணே......எங்களுக்கு நீங்க அதிகாரம் வென்று தருவதெல்லாம் சிறுத்தைகளே! என்று எங்களுக்கு நெகம் முளைக்கவைத்தது தமிழ்தேசியவாதிகளுக்கு அரிப்பெடுக்கும்போதெல்லாம் சொறிந்து கொடுப்பதற்க்கா.......போதும் உன் உதட்டசைவிற்க்காக காத்திருக்கிறோம்.......உன் தம்பிகள்
Arunan Durai: தமிழ் தேசியத்தின் கூக்குரல்
நாம் தமிழராய் கூடுவோம்
கூடவில்லையே !!
நீ எனக்கு அடிமை அது தான்
எனக்கு பெருமை என்கிறானே
சிங்கமும் நாயும் ஒன்றா ??
நானும் , நீயும் தமிழா ???
Isai Arasu பல ஆயிரம் சாதிகளாக பிரிந்து கிடக்குற நாம் ஒருதேசம் என்று பேசுவதே மாயை, மனநோய் இதிலிருந்து எவ்வளவு சீக்கிரம் விடுபடுகிறோமோ அவ்வளவுக்கு நல்லது என்றார் பாபா சாகேப் அம்பேத்கர். இந்த முண்டங்களுக்கு இதெல்லாம் புரியாது விடுங்க!
Joshua Isaac எரிச்சவன் வன்னிய சாதி வெறியர்கள் என்று சொல்ல இவனுங்களுக்கு முதல்ல துணிச்சல் இருக்கானு கேட்டு சொல்லுங்க ? அடிச்சவனும் அடி வாங்கினவனும் தமிழனாம் ..
Isai Arasu ஹலோ.. கொளுத்தப்பட்டது ஊர் இல்ல , சேரிங்க . இந்த அழகுலதான் இருக்குது உங்க தமிழ்த்தேசிய புரிதல்.
Joshua Isaac : சேரியை கொளுத்துனது வன்னியர் சாதி வெறி கும்பல் என்று வெளிப்படையாக எழுத முடியாத நீங்கெல்லாம் மத்த எதுக்குடா பயன்பட போறீங்க? திராவிடமும் திராவிடனும் இல்லை..தமிழ் தேசியமும் தமிழனும் இல்லை.. இங்கு இருப்பதெல்லாம் புழுத்து நாறிக் கிடக்கும் சாதியும் சாதி வெறியர்கள் மட்டுமே !!
கா முத்தமிழ்வளவன் விசிக : திமிரு எழு திருப்பி அடி எப்போது நாம் இன்னும் அடிவாங்கி முடங்கித்தான் கிடக்க வேண்டுமா தமிழ்தேசியம் பேசி நாம் தனிமைப்பட்டது போதும் நமக்கு தேவை நம் இணமீட்பு அரசியல்...... பொருத்தது போதும் எம் இணத்தின் மீட்சிக்கு மீன்டும் களமாட வா தலைவா.....
கா முத்தமிழ்வளவன் விசிக : புண்ணாக்கு தமிழ்தேசியம்.....
தமிழன் வேலு : கடந்த காலங்களில் நான் பேசிய தமிழ்தேசியம்
எம்மக்களின் கண்ணீரை துடைக்க கரம்நீட்டவில்லை;அதற்காக, தமிழ்தேசியத்தை
பேசியதற்காகவே வெட்கபடுகிறேன் !
இன்னும் நிறைய இருக்கு .................................
No comments:
Post a Comment