Friday, November 16, 2012

இந்த வன்னிய ஜாதி  வெறியாட்டம் என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வண்கொடுமை. இங்கு மக்கள் சாகவில்லை என்றாலும் 2000 பேருக்கு மேல் கூட்டமாக ஆண் பெண் குழந்தைகள் என்று வந்து இப்படி ஒரு கொடூர செயல்  இதுவரை நடக்கவில்லை. கீழ்வெண்மணி, கயர்லாஞ்சி, பரமக்குடி வன்கொடுமைகளை விட இது மிகவும் கொடியது. நாம்  மக்கள் அங்கு உயிர் சேதம் இல்லாமல்  தப்பித்தது மிகப்பெரிய மிரக்கள். ஆனால் அது நடந்த பின்னரும் நாம் தூங்கி கொண்டு இருப்பது தான் வெட்கக்கேடு. இதற்கு முழுக்க முழுக்க கரணம், நமது அண்ணணின் வன்னியர் பாசமும் தமிழ் தேசிய அரசியலும்தான். அரசியல் மனோதத்துவம் படித்தவர்களுக்கு தெரியும். ஒரு தலைவன் தொடர் பிரச்சாரம் மூலம் ஒரு சமூகத்தை விழிக்கவும் வைக்க முடியும் தூங்கவும் வைக்க முடியும். அண்ணன் கடந்த இருபது வருடங்கள் ஈழம் பேசி தமிழ் தேசியம் பேசி நமது மக்களின் நாடி நரம்புகளை எல்லாம் முடக்கி தூங்க வைத்து கொண்டு இருக்கிறார். இவ்வளவு நடந்த பின்னும் நமது மக்களின் மெத்தனத்தை பாருங்கள். பிரபாகரன் இல்லாமல் சிறுத்தைகளின் போஸ்டர் இல்லை எனும் காலம் மாறி நாம் நமக்காக எப்போது போஸ்டர் அடிக்கிறோமோ பேசுகிறோமோ அப்போதுதான் நாம் நமது அரசியலை மீட்டு எடுக்க முடியும். 80 களில் 90 களில் வன்கொடுமைகள் நடந்தபோது அதை நம் மக்கள் வீறு கொண்டு எதிர்தார்கள். ஒரு மாவட்டத்தில்  நடக்கும் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டங்கள் போஸ்டர்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக நாடு முழுக்க சிறுத்தைகள் போஸ்டர் இருந்தது ஆனால் அது  நமக்கான போஸ்டர்கள் இல்லை ஈழதுக்காகவும் தமிழ் தேசியத்துக்கானதாகவும் தான் இருந்தது. இப்போது மாவீரர்  தினம் வருகிறது நாம் எல்லோரும்  பார்க்கத்தான் போகிறோம். 2009 ல் நடந்த இனப்படுகொலைக்கு இவர்கள் எப்படி  விரைத்துக்கொண்டு நிக்க போகிறார்கள் பாருங்கள். போதும் நம் மக்களை முட்டாள்களாக்கியது.  தர்மபுரி வன்னியர்கள் அடித்த கொள்ளை சில கோடிகளே. மாநிலத்தில் திராவிட அரசும் மத்தியில் காங்கிரசு பா ஜா கா அடித்துள்ளது ஆயிரம்  ஆயிரம் கோடி. நம்  சமூகத்தில் உள்ள பொருளாதாரம் படித்த மாணவர்களை கேளுங்கள் நமக்காக ஒதுக்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் கோடிகளை  இந்த அரசுகள் கொள்ளை அடித்து ஜாதி தமிழர்களையும் ஜாதி இந்துக்களையும் வழ வைத்துக்கொண்டு இருப்பது தெரியும். அதை எல்லாம் மீட்க நமக்கு நீதி கிடைக்க நாம் போராட வேண்டி உள்ளது. அண்ணனை நம்பினால் ஆட்டு மந்தைகளாக அவர் பின்னால் போய்  ராமதாசுக்கு ஒத்து பாட வேண்டியது தான். ஜாதி ஒழிப்பு நமது வேலை இல்லை. நாம் நமது மக்களை முதலில் காப்போம். அப்புறமா ஜாதிய ஒழிச்சு பொது சமூகத்தை காப்போம். அண்ணன் உலக  தமிழர்களுக்கு உறுதி அளித்துள்ளார் ராமதாசின்  வன்னிய கூட்டத்துடன் வைகோ நாயுடு கூட்டத்துடன்  இணைந்து  தமிழ் தேசியத்தை அவர் வென்று எடுக்கட்டும். நாம் நமக்கான பாதையை அமைப்போம். நமக்கான தலைவர்களை அடையலாம் காணுவோம். இத்தனை பெரிய சமூகத்தில் தலைவர்களுக்கா பஞ்சம். ஆம் என்றால் அதை விட வெட்கக்கேடு வேறு இல்லை.....

No comments: