Tuesday, November 6, 2012

இந்து தமிழர்களுக்கு புத்தம் கசப்பான மருந்தே. அது விஷமாகவே தெரியும். இந்த புத்த எதிர்ப்பை நாம் இன்று நேற்று பார்க்கவில்லை. ஆயிரம் ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். புத்தம் காலாவதியாகி விட்டதா. பூமியை பிளந்துகொண்டு வருகிறது சாமீங்களா. புத்தத்தை பற்றிய உங்கள் எதிர் பிரச்சாரங்களை மீறி அது உலகை வென்று கொண்டு இருக்கிறது. உலகின் மிகப்பெரிய மதங்களில் அது ஒன்று. உங்கள் ஆரிய எதிர்ப்பு, நாத்தீக நடிப்பை எல்லாம் மீறி உங்கள் இந்து மத பாசம் உங்களை அண்ணலுக்கு எதிராகவும் புத்தத்துக்கு எதிராகவும் பேச வைத்துக்கொண்டு இருக்கிறது. அரசியல் சாசனம் ஜாதியை ஒழிக்கவில்லை. அது அரசியல் சாசனத்தால் முடியாது. அது இந்து மத அழிப்ப்பினால் மட்டுமே முடியும். இந்து மத அழிப்பு என்பது இந்து கோயில்களை இடிப்பதாலோ! பூணூலை அருப்பதாலோ வராது. ஆழ் மனதில்  உள்ள உங்கள் இந்து நம்பிக்கைகள் அழிய வேண்டும். ஜாதி ஒழிப்பு எங்களுக்கு தேவை இல்லை அது தமிழ் / ஹிந்துக்களுக்கு அவசியம். நாங்கள் ஜாதியற்றவர்கள். எங்களில் உள்ளவர்களிடம் ஜாதிக்கான உயர்வு தாழ்வு இருக்கிறது எனில் உங்கள் இந்துமதம் எங்கள் மக்களையும் ஆட்டி படைக்கிறது என்றே அர்த்தம் அதை அவர்கள் விடுவார்கள் எனில் அந்த உயர்வு தாழ்வு எனும் பாகுபாடு வேற்றுமை இருக்காது. சாக்கியத்தை ஆயிரம் ஆண்டுகள் விட்டுவிட்டு இந்து மத சாக்கடையில் சுவாசம் கண்டவர்கள் இன்னும் ஜாதியை பிடித்து வைத்து உள்ளனர். அரசியல் சாசனத்தில் அண்ணல் பெற்றவை சலுகைகள் அல்ல அவைகள் உரிமைகள். அது உங்களுக்கு இல்லை என்று தான் ராமசாமி வயிறு எரிந்தார். அந்த உரிமைகளுக்காக நாங்கள் இந்துக்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் புத்தத்தில் இருந்தாலும் அந்த உரிமைகள் எங்களுக்கு இருக்கும். அது நாங்கள் பிச்சைகாரர்கள் பின்தங்கியவர்கள் பிற்படுத்தப்பட்ட ஜாதிகள்  என்பதற்காக கொடுக்கப்பட்ட சலுகைகள் அல்ல. அது நாங்கள் ஜாதி அற்றவர்கள், ஜாதிக்கு வெளியே உள்ளவர்கள், இந்த மண்ணின் பூர்வ குடிகள் என்பதற்கான உரிமைகள். அது அரசியல் சாசனம் மூலம் வந்தது அல்ல அண்ணலின் தாத்தாவின் மற்றும் ஆயிரம் ஆயிரம் சாக்கிய குடிகளின் அயராத உழைப்பால் கிடைத்த உரிமைகள். தமிழர்கள் திராவிடர்கள் என்று ஊரை எமாற்றிக்கொண்டு இல்லாமல் நேரடியாக இந்து முகம் காட்டி புத்தத்தை எதிர்க்கும் உங்களை பாராட்டுகிறேன்....

No comments: