Sunday, November 11, 2012

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய தேசியம் பேசாமல் இருந்தால் நம்மை துரோகிகள் என்றனர். அப்படி இந்திய தேசியம் பேசாமல் சாக்கியம்/தலித்தியம்  பேசியதால் தான் நாம் இன்று மற்றவர்களுக்கு சமமாக பல உரிமைகளை பெற்று இருக்கிறோம். சாக்கியம் பேசாமல் இந்திய தேசியம் பேசிக்கொண்டு இருந்து இருந்தால் இந்நேரம் ஜாதி இந்துக்களுக்கு டிங்கி அடிச்சிக்கிட்டு இருப்போம்... திராவிடம் / தமிழ் தேசியம் நமக்கானது இல்லை. அது ஜாதி இந்துக்களின் சூத்திரகளின் அரசியல். அதை பேசி வீணா போகாமல் நமக்கான அரசியலை பேசுங்கள்...இல்லை எனில் மேலும் பல தர்மபுரிகள் நாம் பார்க்க வேண்டி வரும்...

சேரிக்குள்ள பிரபாகரணையும் தமிழ் தேசியத்தையும் கொண்டுவந்து நமது சமூக உணர்வுகளுக்கு முற்று புள்ளி வைக்கும் சாதனையை நம்மால் எல்லாம் செய்ய முடியாது. ஜாதி வெறி பிடித்த  சூத்திர நட்டாமைகளுக்கு அண்ணலின் பெயரில் விருது கொடுத்து அண்ணலை அசிங்க படுத்த நம்மால் முடியாது.

அண்ணலின் பெயரில் விருது வாங்கும் அளவுக்கு அவர்கள் மிகச்சிறந்த மனிதர்கள் எனில் நமக்கு எதுக்கு தனி கட்சி அவுங்க கட்சியிலேயே பொய் சேர்ந்துவிடலாமே. 

No comments: