Sunday, November 11, 2012

எங்களுடைய விமர்சனம் திருமா என்னும் தனி மனிதருக்கு எதிரானது அல்ல.
அது தமிழ் தேசியத்துக்கு எதிரான விமர்ச்சனம். இன்னைக்கு அதுதான் தமிழ் நாட்டில்  தலித் அரசியல். இது வி சி கே வுல இருக்குற சாதாரண தொண்டனுக்கு கூட தெரியும். வி சி கேவில் உள்ள சாதாரண தொண்டர்கள் முக புத்தகத்தில் எழுதுகிறார்கள். இனிமே எவனாவது நாம எல்லோரும் திராவிடர்கள் தமிழர்கள்ன்னு தர்மபுரி பக்கம் வந்தா செருப்பால அடிப்போம்னு. சிங்களவன் எப்படி இருப்பான்னு  கூட நமக்கு தெரியாது. அவன் கருப்பா  சிவப்பா வெள்ளையா அப்படின்னு நாம நேரில் இதுவரைக்கும் பார்த்தது இல்லை. அவர்கள் எல்லோரும் இன வெறியர்களா? அவர்கள் அங்கு உண்மையில் தமிழ் மக்களைஅடிக்கிறார்களா? அடி வாங்கும் அளவுக்கு அங்கு சூழ்நிலை உள்ளதா என்பதெல்லாம் நமக்கு தெரியாது. பத்திரிக்கை மூலம், அரசியல் வாதிகள் மூலம் கேட்பதை வைத்தே நம் மக்கள் குமுறுகிறார்கள். அதற்கு காரணம் தமிழர்களின் ஊடக ஆதிக்கம். ஆனால்  வன்னியர்களையும் அவர்கள் ஜாதி வெறியையும் பச்ச குழந்தையா இருந்தது முதல் தினம் தினம் பார்க்கிறோம். அவர்கள் ஜாதி திமிரையும் ஆதிக்க வெறியையும் கண்ணெதிரே காண்கிறோம். அவர்கள் செய்த கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் எல்லாம் புத்தகத்தில் படித்தோ சினிமாவில் பார்த்தோ தெரிந்து கொள்ள தேவை இல்லை. அவையெல்லாம் நம் வாழ்க்கை. நம் முப்பாட்டன், பாட்டி, அப்பன், ஆத்தா எல்லோரும் அனுபவித்தது. இன்னும் நமது பிள்ளைகள் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் நமக்கு அந்த குமுறல் இல்லை. நமது ரத்தம் துடிக்கவில்லை. ஏன் அவர்கள் எல்லாம் நமது தமிழ் சொந்தங்கள் என்று பொய்யான ஒரு மாயை நமக்கு கற்பிக்கப்படுகிறது. உலகத்துல எந்த மூளைக்கு போனாலும் ஒரு மகார் மகாராக இருக்கிறான். ஒரு கைரலாஞ்சி  உலகமே பத்தி எரிஞ்சது. அது நடந்து முடிந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகியும் அது இன்றும் உலகம் முழுக்க பேசப்பட்டு வருகிறது. அவர்கள் எழுச்சியை பாருங்கள். அதில் சிலர் வன்முறையில் ஈடுபட்டதும் உண்மையதான் வன்முறையை விட அதை அவர்கள் அரசியல் ஆக்கினார்கள். ஊடகங்களுக்கு கொண்டு சென்று அதை மிகப்பெரிய சமூக பிரச்சனையாக ஆக்கினார்கள். அவரகள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் எந்த தேசத்தில் இருந்தாலும் தலித்திய அரசியல் சிந்தனையில் உள்ளனர். நாம் தமிழ் நாட்டில் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். தமிழ் நாட்டை தாண்டினால் இருக்கிற கொஞ்சம் உணர்வும் போயிடுது. ஒரு கூட்டம் மாவீரர்  தினத்துக்கு தங்களை தயார் செய்து கொண்டு இருக்கிறது மற்றொரு கூட்டம் தீபாவளிக்கு தங்களை தயார் செய்து கொண்டு இருக்கிறது. இதில் நமது அண்ணன் நான் தான் தமிழ் தேசியத்தை சேரிக்கு கொண்டு போனேன்னு பெருமை பேசிக்கிட்டு இருக்காரு. சேரிக்கு தமிழ் தேசியத்தை கொண்டுபோய்  சாதித்தது என்ன? எமது சமூக உணர்வை அழித்து அடுப்பில் போட்டு விட்டீர்  என்பதே எமது விமர்ச்சனம். ஆதிக்க ஜாதிகள் ஆண்ணனை தமிழ் தேசியத்தை விட்டு விளக்க பார்க்கிறார்கள், உங்கள் விமர்ச்சனம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கவலை படுகிறார்கள் நம் சகோதர்கள். நாம் இல்லை எனில் தமிழ் தேசியம் கிடையாது இதை நாம் செய்து காட்டினால் நமது பலம் அவர்களுக்கு தெரியும். இந்து மத்தத்தை எதிர்க்க வேண்டிய காலத்தில் அண்ணல் அதை எதிர்ர்த்தார் நாம் அதனால் பலன் பெற்றோம், அந்த பலன் இன்றும் தொடர்கிறது, நமக்கான மதம் நமக்காண அடையாளம் காட்டப்பட்டது, திராவிடத்தை எதிர்க்க வேண்டிய காலத்தில் அதை எதிர்க்கவில்லை திராவிடம் நம்மை என்பது  ஆண்டுகள் ஆளுகிறது அதற்கு நாம் கூஜா தூக்கி கொண்டு இருக்கிறோம். இப்போது நாம் எதிர்க்க வேண்டியது தமிழ் தேசியம். அதை எதிர்க்காமல் விட்டு விட்டால் அது நம்மை அடுத்த நூறு ஆண்டுகள் ஆளும் அடுத்த மூன்று தலை முறை அதுக்கு நாம கூஜா தூக்க வேண்டியது தான். இன்னைக்கு நமது சகோதர சகோதரிகள் இந்து  திரவிட  தமிழிய அடையளங்களை விட்டு வெளியே வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை அவர்களது சக்தியை சரியான முறையில் பயன்படுத்தினால் ஜாதி தமிழர்கள் நம்மிடம் ஓடி வருவார்கள். சாக்கிய  சக்தியை அரசியல் ஆக்குவோம். மீண்டும் ஒரு தருமபுரி வராமல் பார்த்துக்கொள்வோம். நம்மை பார்த்து அரசு அலற வேண்டும். அரசு சரியான் பாது காப்பு கொடுத்து இருந்தால் இந்த வன்முறையை தடுத்து இருக்க முடியும். நாம் தலித் அரசியலை வலிமையாக கட்டமைத்து இருந்தால் இந்நேரம் சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று ஆ தி மு கா அரசு களைந்து இருக்கும். நாம் உண்மையை ஒத்துக்கொள்வோம். நாம் இன்னும் சரியான அரசியல் சக்தியாக உருவாகவில்லை. தமிழ் தேசிய மேனா மினுக்கி விளம்பர  அரசியல் செய்து கொண்டு இருக்கிறோம்.....




 











No comments: