Wednesday, November 14, 2012

பறையரின் வலியை பறையராய் இருந்து  பார்த்தால் தான் புரியும் தமிழராய் இருந்து பார்த்தால் தெரியாது.....

நாங்க முக நூலில் மட்டும்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம், எங்களுக்கு வீடு வாசல் குடும்பம் எதுவும் கிடையாது, நாக்க ஜாதிய கொடுமையை அனுபவிச்சதேயில்லை, எங்களுக்கு வறுமை என்றாலே என்னவென்று தெரியாது. போராட்டம் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியாது. நாங்க எந்த நாயக்கனையும் அடித்ததும் இல்லை அவனிடம் அடி வாங்கியதும் இல்லை. போலிசை அடித்ததும் இல்லை போலீசிடம் அடி வாங்கியதும் இல்லை. துப்பாக்கி கண்ணீர் புகை இதை எல்லாம் பார்த்தது இல்லை. காடு மேடு கழனியெல்லாம் போய் நம் மக்களிடம் தலித்தியம்  சாக்கியம் பேசியது இல்லை. எங்கள் வேர்வை எங்கள் ரத்தம் பூமியில் சிந்தப்படவில்லை. நாங்கள் தலித்தியம் அண்ணல் அம்பேத்கரிசம்  பண்டிதரிசம்  பற்றி படிக்கவில்லை. அவற்றை மக்களுக்கு பரப்பவும் இல்லை. நாங்க அட்ட கத்திதான். ஆனா எனக்கு ஒரு சந்தேகம் அண்ணன் எத்தனை முறை திமிறி எழுந்து இருக்காரு? எத்தனை வன்னியர்களை திருப்பி அடிச்சி இருக்காரு எத்தனை வன்னியர் வீடுகளை கொளுத்தி இருக்காரு? வன்னியர் வாள் எப்போது அவரது கைக்கு மாறியது, இந்த இருபத்து ஐந்து ஆண்டுகள் போராட்டத்தில் எத்தனை கொலைகள் செய்து இருக்காரு? சும்மா மேடையில் அட்டை கத்தி பிடிச்சிட்டு, அடங்க மறு அத்து மீருன்னு கலர் கலரா போஸ்டர் போட்டா போததாது. அதை செய்து கட்டனும். ஊடு கொளுத்தும் மரம் வெட்டும் கொள்ளைகார ஜாதி வெறியர்களிடம் சேரியில் மள்ளு கட்டிக்கொண்டு நிற்போம், இவர் லண்டன் போய் ஜாதி வெறி நாய்களிடம் "என் தமிழ் சொந்தங்கலேன்னு" பேசிட்டு வருவாரு......

திராவிடத்தையும் தமிழ் தேசத்தையும் விட்டு விட்டு தலித்தியம் பேச சொல்லுகிறோம். தலித் மக்களுக்கான அரசியல் செய்ய சொல்லுகிறோம்....

நாங்க முகத்த மூடிக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கோமாம். தமிழர்கள் மீசைய முறுக்கிக்கிட்டு பேசிக்கிட்டு இருக்காங்கலாம். ஒத்துக்குறோம் சாமி தமிழ் நாட்டுல பாதி பேருக்கு மீசை இல்லைன்னு. தமிழ் நாட்டுள உள்ள பொம்பளைங்க எல்லாம் உங்க அகராதிபடி  தமிழர்கள் இல்லை. ரொம்ப சந்தோசம்.....



No comments: