நான் உங்களை போல ஈழத்து பிரச்சனைய டி வி யில பாத்து புத்தகத்துல படித்து தினதந்தியில படிச்சு தமிழ் இன உணர்வு கொண்ட அட்ட கத்தி புலி அல்ல. பறையர் எனும் உணர்வு ரத்ததில் வந்தது. எதுக்கு அடிக்குறோம் அவுங்க எதுக்கு நம்மளை அடிக்கிறாங்கன்னு தெரியாத வயதில் ஜாதி இந்துக்களை எதிர்த்தவர்கள் நாங்கள். ராமசாமியை படித்து சாதியத்தை தெரிந்து கொள்ளவில்லை பிரபாகரனை படித்து திருப்பி அடிக்கவில்லை. அடித்ததும் அடி வாங்கியதும் எங்கள் வாழ்க்கை. தர்மபுரிக்கு போய்தான் எங்கள் மக்களின் வலியை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. அந்த வாழ்வியலை நேரில் பார்த்து இருக்கிறோம் அந்த வலியை வாழ்வில் அனுபவித்து இருக்கோம். அங்கு பச்சிளங் குழந்தைகள் வீடுகளை எரிய விட்டதை பற்றி சொல்ம்போது பள்ளியில் படிக்கும் பருவத்தில் ஏற்பட்ட அநுபவங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. ஜாதி இந்துக்களையும் போலீசையும் அடித்து விட்டு சேரி மக்கள் அனைவரும் தலைமறைவு. மாற்று துணி இல்லாமல் சேரிக்குள் போக முடியாமல் திரிந்த கதை. தமிழனா இருந்து பாத்தா இது உனக்கு புரியாது பறையனா வந்து பார் புரியும்......
No comments:
Post a Comment