Friday, November 16, 2012

////பாமக நிறுவனர் ஐயா ராமதாஸ் அவர்கள் சாதி ஆதிக்கவாதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் தமிழக மக்களுக்காக விடுதலை சிறுத்தைகள் பாமகவுடன் இணைந்து போராட தயாராக உள்ளது" - திருமா ///// இதுல இருக்குற "ஐயா" எதுக்கு? இதுக்கு மேலேயும் பா மா கா கூட இணைந்து போராடனுமா? யாரை எதிர்த்து போராடனும்? கண்ணுக்கே தெரியாத சிங்களவர்களையா? இல்லை அமெரிக்க அதிபர் ஒபாமாவையா? தர்மபுரி வீட்டை கொளுத்தின வன்னியர்களையா? இல்லை வீட்டை இழந்து நிக்கும் எங்களையா? ராமதாஸ் ஆதிக்க ஜாதிய வாதிகளை எதிர்க்கணுமாம். அப்படின்னா ராமதாஸ் யாரு? எனப்பா உங்க அரசியல்? ராமதாஸ் ஒரு  சாதியவாதி அவர் கட்சிக்காரர்களே இந்த வீடு கொளுத்திகள் கொள்ளை காரர்கள் என்பது தர்மபுரியில் எறிந்த வீடுகளுக்கு கூட தெரியும். ஆறறிவு உள்ள நம்ம அண்ணனுக்கு ஏன் தெரியல? 

No comments: